12 ஆயிரம் கன அடியிலிருந்து 8,500 கன அடியாக உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

by Admin / 16-12-2024 11:23:50am
12 ஆயிரம் கன அடியிலிருந்து 8,500 கன அடியாக உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 35 அடி உயரத்தில் தற்போது 33.அடி உயரம் உள்ளது 3231 மில்லியன் கனடியில் தற்போது 2521 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நேற்று 8500 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதே  7320 ஆயிரம் கன அடி  நீர்வரத்து வந்துகொண்டிருகிறது பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 8500 கன அடியாக குறைத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே உள்ள நீர்த்தேக்கம்இது .. 60 கிமீ தொலைவில் உள்ள சென்னை நகருக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

 

Tags :

Share via