சுகாதாரமில்லாத தண்ணீர் குடித்த மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறி கல்லூரிக்கு சீல்..?

by Staff / 10-10-2025 10:33:29am
 சுகாதாரமில்லாத தண்ணீர் குடித்த மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறி கல்லூரிக்கு சீல்..?

நெல்லை: திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் குடித்த 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரியின் விடுதியில் நேற்று (அக்., 09) சுகாதாரத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூட நோட்டீஸ் வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறையினர் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தி குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி உத்திரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி  குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 15 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களது ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி சோதனை செய்தனர். அதில் அவர்களுக்கு எலிக்காச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். கல்லூரியையும் சுத்தப்படுத்துமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதாரத் துறையினர் கல்லூரிக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : சுகாதாரமில்லாத தண்ணீர் குடித்த 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறி கல்லூரிக்கு சீல்.

Share via