உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்- துரைமுருகன்

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார். காட்பாடியில் நடந்த திருமண விழாவில் உரையாற்றிய துரைமுருகன், "துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதியை போல் ஞாபக சக்தி அதிகம். எனது மகன் கதிர் ஆனந்திற்காக முதன் முதலில் எம்.பி தேர்தலில் பிரச்சாரத்திற்கு வந்து பேசியதை உதயநிதி குறிப்பிட்டார். அது எனக்கே ஞாபகம் இல்லை. ஆனால் அவர் ஞாபகம் வைத்து பேசுகிறார்" என்று கூறியுள்ளார்.
Tags :