ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு... காணொலி வாயிலாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி...

by Admin / 17-09-2021 04:00:14pm
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு... காணொலி வாயிலாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி...

 



ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய உயர்மட்டக்குழு கலந்து கொள்கிறது.

 ரஷியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, இன்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடைபெறுகிறது.

தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டில், உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளராக உள்ள நாடுகளின் தலைவர்கள், நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில், பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு பங்கேற்கிறது. காணொலி வாயிலாக கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரை நிகழ்த்துகிறார்.

 
இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேசமயம், இந்திய பிரதிநிதியாக நேரில் கலந்து கொள்வதற்காக, ஏற்கனவே துஷான்பே சென்றுவிட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அர்மேனியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து அவர் பேசினார்.

 

Tags :

Share via