என்.ஐ.ஏ தேடிவந்த பயங்கரவாதி சென்னையில் கைது
சென்னையில் உள்ள பெரியமேடு காவல் நிலையம் அருகே கடந்த 5 ஆம் தேதி சுராஜ் என்ற நகை வியாபாரியிடம் வழிப்பறி கொள்ளை நடைபெற்றது. சுராஜிடம் இருந்த 282 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.7.50 இலட்சம் பணம் ஆகியவை வழிப்பறி செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரில் ஒருவராக இருந்த யாசின் என்பவனை காவல் துறையினர் கைது செய்தனர். அவனிடம் விசாரணை மேற்கொண்டு, அவனது கூட்டாளியான ரபீக் என்பவனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.ரபீக்கிடம் மேற்கொண்ட விசாரணையில் அவன் சி.பி.சி.ஐ.டி மற்றும் என்.ஐ.ஏ அமைப்புகளால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது உறுதியானது. ரபீக் பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலமாக சென்னையில் கள்ளநோட்டை விநியோகம் செய்பவன் என்பதும் அம்பலமானது.
மேலும், அல் உமாஹ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ரபீக் என்.ஐ.ஏ அதிகாரிகளால் தேடப்பட்டும் வந்துள்ளான். இந்நிலையில், ரபீக் திருட்டு வழக்கில் பெரியமேடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனை என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களின் கண்காணிப்பு வளையத்தில் வைத்து விசாரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Tags :