ஒரே நாளில் வக்கீலான அப்பா, மகள்!

கேரளா மாநிலம் கொச்சி கக்கநாட்டை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருக்கு சிறு வயது முதலே வழக்கறிஞராக ஆக வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக ஆசிரியராக வாழ்வை தொடங்கிய இவர், கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் அவர் தனது மகளுடன் சேர்ந்து பி.ஏ.பி.எல் படிப்பு முடித்து இருவரும் பட்டம் பெற்றனர். இந்த நிலையில், பட்டம் பெற்ற இருவரும் கொச்சி உயர்நீதிமன்ற பார் கவுன்சலில் பதிவு செய்த நிலையில், தந்தை, மகள் இருவரும் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நேற்று பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு தங்களது பணியை துவங்கினர்.
Tags :