பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 12-04-2023 02:31:12pm
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள சாதிக் நகர் இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 10:49 மணியளவில், பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கும் படைக்கு தகவல் கொடுத்தது. அங்கு வந்து தேடியபோது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நடிகர் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via

More stories