சத்தான வாழைப்பூ சப்பாத்தி

by Editor / 19-04-2021 02:39:38pm
சத்தான வாழைப்பூ சப்பாத்தி

தேவையான  பொருட்கள்:

கோதுமை மாவு - கால் கிலோ,

பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன், 

நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் (ஒரு கைப்பிடி),

சின்ன வெங்காயம் – 7, 

பச்சைமிளகாய் – ஒன்று,

பூண்டு - 2 பல்,

சீரகம் - 2 சிட்டிகை, 

எண்ணெய் - தேவையான அளவு, 

உப்பு - தேவையான அளவு, 

தயிர் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்

Tags :

Share via