தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்குஎம்.பி. கனிமொழி உதவி

by Editor / 05-06-2021 06:04:16pm
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்குஎம்.பி. கனிமொழி  உதவி

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில்,பின்னர் அது வன்முறையாக வெடித்தது.

இதனையடுத்து,போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும்,இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஸ்டாலின் சமீபத்தில் பணிநியமன ஆணையை வழங்கினார்.

இந்நிலையில்,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 94 பேர்களில்,93 பேர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ரூ.1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாயாருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையை திமுக எம்.பி.கனிமொழி வழங்கினார்.

 

Tags :

Share via