அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

by Staff / 26-07-2024 05:37:24pm
அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர், "கார்கில் விஜய் திவாஸ் தினத்தன்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற சமயங்களில் மோடி அற்ப அரசியல் செய்கிறார். இதற்கு முன்னால் இருந்த பிரதமர்கள் யாரும் இப்படி செய்ததில்லை. ராணுவத்தின் பரிந்துரையின் பேரில் தனது அரசு அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்தியதாக மோடி கூறுகிறார். இது அப்பட்டமான பொய், நமது வீரம் மிக்க பாதுகாப்பு படைகளுக்கு மன்னிக்க முடியாத அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories