பள்ளிக்குள் புகுந்த முதலை அலறியடித்து ஓட்டம் பிடித்த மாணவர்கள்

by Staff / 22-09-2022 04:32:32pm
பள்ளிக்குள் புகுந்த முதலை அலறியடித்து ஓட்டம் பிடித்த மாணவர்கள்


உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாநிலத்தில் உள்ள காசிம்பூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் முதலை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.முதலையை பார்த்த பள்ளிக்குழந்தைகள் கூச்சல் போட்டதும், கிராம மக்கள் தடியுடன் ஓடி வந்தனர். முதலையை அடித்து விரட்டி வகுப்பறைக்குள் கொண்டு சென்று கதவை மூடினர். அனைத்து குழந்தைகளும் வகுப்பை விட்டு வெளியே வந்து அதிகாரிகள் வருவதற்காக காத்திருந்தனர்.

பின்னர் மாநில வனத்துறை அதிகாரிகள் வந்து முதலையை பிடித்து கொண்டு சென்றனர். கங்கை நதியில் முதலை விடப்பட்டதாக கோட்ட வன அலுவலர் (டிஎஃப்ஓ) திவாகர் வசிஷ்த் தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் பல ஓடைகளும் கங்கை நதியும் ஓடுகின்றன. இது குறித்து பள்ளி ஊழியர்கள் கூறுகையில், "கிராம குளத்தில் ஏராளமான முதலைகள் காணப்படுவதாகவும், கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பலனில்லை.

வெள்ளத்தின் போது ஓடைகளில் இருந்து கிராம குளத்திற்கு செல்லும் போது முதலை மாற்றுப்பாதையில் பள்ளிக்கு சென்றிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். குளத்தில் அதிக முதலைகள் வசிக்கின்றனவா என்பதை கிராம பஞ்சாயத்து உதவியுடன் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஎஃப்ஓ தெரிவித்தார். கண்டுபிடிக்கப்பட்டால் மீதமுள்ளவற்றையும் பிடித்து ஆற்றில் விடுவோம் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo