மாநிலம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

by Admin / 28-04-2026 01:35:31am
 மாநிலம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும்  மையங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக மாநிலம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும்  பணி நடைபெறும். தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குப் பிறகு காலை எட்டு முப்பது மணிக்கு வி .வி .எம் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் எண்ணும் பணி முழுமையாக முடிக்கப்பட்ட பின்பே இ.வி.எம் இயந்திர வாக்குகளின் கடைசி சுற்று எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணும் 62 மையங்களிலும் மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo