அமைச்சர் மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட முயன்ற அதிமுக முன்னாள் எம் எல் ஏ உறவினர்கள் கைது

மதுரை மாவட்டம் சமய நல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் கருவனூர் கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட காரினை அந்த கிராமத்தில் திமுக வை சேர்ந்தவர்கள் தீவைத்து எரித்ததாக கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் புகார் கூறப்பட்டவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதாலும் அமைச்சர் மூர்த்தி ஆதரவாளர்கள் என்பதாலும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறி வந்தனர்.இந்நிலையில் நேற்று சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் வேறொரு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு சென்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்னம்பலம் மகன் திருச்சிற்றம்பலம் சென்ற போது திமுக தரப்பினர் வாய்த்தகராறில் ஈடுபட்ட போது பொய்யான வழக்கு பதிவு செய்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்னம்பலம் மகன் திருச்சிற்றம்பலத்தை சத்திரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்பலம் உறவினர் மற்றும் கருவனூரை சேர்ந்த இருபதுக்கும் முற்பட்டோர் மதுரை அய்யர்பங்களாவில் உள்ள அமைச்சர் மூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்றனர்.அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
Tags : அமைச்சர் மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட முயன்ற அதிமுக முன்னாள் எம் எல் ஏ உறவினர்கள் கைது