சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க  முயன்ற நபர்  கைது.

by Editor / 08-12-2024 11:39:12am
சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க  முயன்ற நபர்  கைது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் சுண்டவழி பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் மார்ட்டின் இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் இவர் கடந்த 5ஆம் தேதி மாலை வேறு ஒருவருக்கு சொந்தமான ஒரு சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார் ஆனால் நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக கூறிய சார் பதிவாளர் அந்த நிலத்தை பதிவு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார் இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற அவர் மேலும் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிறிய பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் சார் பதிவாளர் மீதும் தன்மீதும் ,அங்கு பணியில்  இருந்த பணியாளர் மீது  ஊற்றிக் கொண்டார் தொடர்ந்துதீக்குச்சியை உரசி சார்பதிவாளர் மீது வீசி உள்ளார் ஆனால் அதிர்ஷ்டவசமாக தீக்குச்சியில்  தீ பிடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை இதனை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்,மதுப் போதையில் இருந்து ஜஸ்டஸ் மார்டினை பிடித்துள்ளனர் ,உடனடியாக கருங்கல் போலீசாருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags : சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க  முயன்ற நபர்  கைது.

Share via