கத்தியால் கழுத்தை அறுத்து பெண் கொலை

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் பிஜோன் - மந்திர் (27) தம்பதி. இவர்கள் பெங்களூருவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். பிஜோனும், அவரது நண்பர் சுமனும் வேலைக்காக அந்தமானுக்குச் சென்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பினார். நேற்று முன்தினம் (ஆக.5) மாலை நண்பரின் மனைவி மந்திர் வீட்டுக்குச் சென்ற சுமன், அவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். கள்ளக்காதல் விவகாரமா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
Tags :