தமிழக முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது இன்று முதல் தொடங்கியுள்ளது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியின் போது கூட்டம் கூட்டமாக நின்ற யானைகள்.*
தமிழக முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது இன்று முதல் தொடங்கியுள்ள சூழலில்*30 குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் தீவிர கணக்கெடுப்பு.*, இந்த பணியானது 3 நாட்கள் நடைபெற உள்ளது..
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
அதாவது, ஒருங்கிணைந்த நெல்லை வனசரக எல்கை பகுதியில் 30 குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து தற்போது இந்த யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இந்த பணியின் போது, யானைகளை நேரில் பார்த்தும், அதன் கால் தடங்கள் மற்றும் எச்சத்தின் மூலமாகவும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், அந்த யானைகளின் வழித்தடங்கள் எங்கெல்லாம் உள்ளன, ஒரு நாளைக்கு எவ்வளவு கிலோமீட்டர் அந்த யானைகள் செல்கின்றன என்பது குறித்தும் இந்த கணக்கெடுப்பின் போது வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் யானைகள் கணக்கிடும் பணிக்காக வன ஊழியர்கள் சென்ற போது கூட்டம் கூட்டமாக யானை கூட்டங்கள் அங்கு நின்று கொண்டிருந்தன.
அதனை பார்த்த வனத்துறையினர் அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து அதில் உள்ள யானைகளை கணக்கெடுத்தனர்.
தொடர்ந்து, சொக்கம்பட்டி, புளியங்குடி, மேக்கரை, செங்கோட்டை, குற்றாலம், புளியரை, வாசுதேவநல்லூர், சிவகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் வனத்துறையினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியினை தீவிரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பின் பணியின் இறுதியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்தும், அதனுடைய செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பணம் செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :