பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. 3 CRPF வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்த விபத்தில், 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பாதையில் சென்ற ராணுவ வீரர்களின் வாகனம், நிலைத்தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது. உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் உள்ள காண்ட்வா அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இதில், 15 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :