தமிழகத்தில் உள்ள ஐடிஐக்கள் புனரமைக்கப்படும்... தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேட்டி...

by Admin / 26-07-2021 03:24:34pm
தமிழகத்தில் உள்ள ஐடிஐக்கள் புனரமைக்கப்படும்... தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேட்டி...

 

தமிழகத்தில் உள்ள ஐடிஐக்கள் புனரமைக்கப்படும்... தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேட்டி...
 
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள 90 ஐடிஐக்களையும் புணரமைக்கும் திட்டம் உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் தொழிலாளர் நலன்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், தொழிலாளர்கள் புகார்கள் அளிக்க தனி தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டு இருப்பதோடு, அளிக்ககூடிய புகாரின் அடிப்படையில்  உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
 
மேலும், தமிழகத்தில் 90 ஐடிஐக்கள் உள்ளதாகவும், கடந்த பத்து ஆண்டுகளாக எவ்விதமான புணரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை என குறிப்பிட்ட அவர், இதனால் பாழடைந்த கட்டிடங்களாக காட்சி அளிக்கும் ஐடிஐக்களை ஆய்வு செய்து,  புணரமைக்கும் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
 
தமிழ்நாட்டில் 15 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் உள்ளதில், 5 வாரியங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வாரியங்களிலும் உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
கொரோனாவிற்கு முன்பு ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கபடவேண்டும் என்ற அடிப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்து இருந்ததாகவும்,தற்போது கொரோனாவால் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் 2 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருவதாகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories