வேன் மோதி விபத்து.. இருவர் பலி
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கர சாலை விபத்து நடந்தது. என்ஐபிஎம் சாலை அருகே வேன் ஒன்று அதி வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஐவர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
Tags :



















