முதலமைச்சரிடம் மீட்புப் பணி விவரங்களை பகிர்ந்த ஆய்வுக்குழு
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க- சிகிச்சை அளிக்க- கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஓடிஸா சென்றிருந்தது. இரு நாட்கள் அங்கு ஒடிசா முதலமைச்சரை சந்தித்து ,அங்குள்ள அதிகாரிகளோடு ஆய்வு நடத்தி, தமிழர்களுக்கான உதவிகளை செய்வதற்காக பல்வேறு நிலைகளை ஆய்வு கொண்ட ஆய்வுக்குழு நேற்று சென்னை திரும்பி ,தமிழக முதலமைச்சரிடம் மீட்புப் பணி விவரங்களை, முதலமைச்சரோடு பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை பலியாகவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















