சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு....

by Editor / 20-11-2021 11:12:59pm
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு....

நெல்லை மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பல்வேறு கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது.

நெல்லை மாவட்டத்தில் கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கீழதேவநல்லூரை சேர்ந்த அருண் உலகநாதன் (42) மற்றும் மறுகால்குறிச்சியை சேர்ந்த வள்ளிநாயகம் (31) ஆகியோரை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் விஸ்ணு உத்தரவு.

 

புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க உயர்கல்வி துறை அனுமதி ஒன்பது இருபாலர்,ஒரு மகளிர் கல்லூரி துவக்கம்.திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், எரியூர், ஆலங்குடி, சேர்க்காடு, கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் 10 புதிய கலை - அறிவியல் கல்லூரிகள் தொடங்க அரசாணை வெளியீடு.

நாடாளுமன்றத்தை நோக்கிய தங்களது டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நிச்சயம் நடக்கும்: விவசாயிகள் அமைப்புகள் அறிவிப்பு.தங்களது போராட்டம் தொடரும் எனவும் அறிவிப்பு.

 

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள சுரபி நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு செக்ஸுவல் டார்ச்சர் எதிரொலியாக கல்லூரியில் உள்ள அறைகளுக்கு சீல் வைப்பு மாணவிகள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு. கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

ஆதி திராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 35 வகையான பயிற்சிகளை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

 

ஆயுள் சிறை கைதிகள் 14 ஆண்டுகள் கடந்ததை அடுத்து, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இளம்பெண்ணின் மூச்சுக்குழாயில் இருந்த 7.5 செ.மீ. நீளமான தையல் ஊசியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி கோவை அரசு மருத்துவர்கள் சாதனை. கோவை தியாகராய நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது கழுத்தை பிளேடு மூலம் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த இளம்பெண்ணை மீட்டு கடந்த 2-ம் தேதி கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவு.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம். திண்டிவனம் அருகே கோழிப்பண்ணையில் மழைநீர் புகுந்ததால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.கடந்த 8 நாட்களுக்கு முன்பு சுமார் 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை பண்ணையில் இறக்கியுள்ளார்.கோழி பண்ணையில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தண்ணீரில் மிதந்து உயிரிழந்தன.

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை; மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது, அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126 லிருந்து 131 ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது என - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தகவல்.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசனை நியமித்து ஆளுநர் உத்தரவு.அதே பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையின் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாற்றியவர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன்.

ஆந்திராவில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் பிநாகினி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத் செல்லும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளில் சிக்கி ஊனச் சான்று வாங்க வருபவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை பெருநகர் விரிவாக்கம் தொடர்பாக 25 ம் தேதி கருத்து கேட்பு கூட்டம். திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்தின் சில பகுதிகளை சென்னை பெருநகரில் இணைக்க முடிவு.இதற்கான கருத்து கேட்பு கூட்டம் 25 ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறுகிறது.

கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் ஓசூரில் ஆற்றங்கரையோரம் மலை போல் குவிந்துள்ள நுரை. தண்டனை  பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோரமுடியாது. உயர்நீதிமன்ற மதுரை கிளை.

9வது மெகா தடுப்பூசி முகாம் : சென்னையில் 1600 இடங்களில் சிறப்பு முகாம். 044 - 2538 4520 & 044 - 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் சந்தேகங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.- சென்னை மாநகராட்சி.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தல்.

சர்வதேச அளவில் திரைப்படங்களை தயாரிப்பதற்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் சர்வதேச திரைப்பட விழாவில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் மயிலாடுதுறை, கரூர், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தூசி பாலாற்றின் மேல் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.காஞ்சிபுரம் - வந்தவாசி - செய்யாறு - திண்டிவனம் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன,காஞ்சிபுரத்திலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் திருப்பதி பாண்டிச்சேரி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளும் பாலத்தின் மீது அணிவகுத்து நிற்கின்றது.

 

ஒன்ஸ்மோர் கேட்க சொன்ன ஸ்டாலின். "தோனி பல ஆண்டுகள் சி.எஸ்.கே. கேப்டனாக நீடிக்க வேண்டும்" ஒன்ஸ் மோர் கேளுங்க ... மீண்டும் சொல்கிறேன் என பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் தோனிக்கு பரிசு கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் CSK பாராட்டு விழாவில் சுவாரஸ்யம்.

 

பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று இரவு நீர்வரத்து அதிகமாக இருக்கும் - வேலூர் மாவட்ட ஆட்சியர். தாழ்வான பகுதிகளில் இருக்கக் கூடிய பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு செல்ல ஆட்சியர் வேண்டுகோள்.

 

ஆந்திர பிரதேசம்: சித்தூர் மற்றும் கடப்பா மாவட்டங்களின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் திரு ஜெகன் மோகன் ரெட்டி, விமானம் மூலம் ஆய்வு செய்தார்.

1.60 கோடி பேர் ஒரு டோஸ் கூட செலுத்தி கொள்ளவில்லை. 18 - 44 வயது - 1 கோடி,45 வயதுக்கு மேல் - 60 லட்சம் தமிழகத்தில் 75 சதவீத பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 72 லட்சம் பேர் 2 வது டோஸ் செலுத்தி கொள்ளவில்லை.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா.

திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளில் 2 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது; விவசாயிகள் தவிப்பு.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த ‘ஓலா’ நிறுவனம் திட்டம்.

திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில்வே பாதையில் கனமழையால் மண் சரிந்த பகுதிகளில் 24 மணிநேரமும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை விபத்துகளில் சிக்கி ஊனச் சான்று வாங்க வருபவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழர்த்திருநாள் தைப்பொங்கல் 2022 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

 

Tags :

Share via