சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு -ஏப்ரல் 7ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

by Editor / 05-04-2022 11:12:31pm
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு -ஏப்ரல் 7ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். 

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது  இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக காவல்நிலையத்தில் வேறொரு புகார் அளிக்க வந்த பேருந்து நடத்துனரான ஆரோக்கியசாமி என்பவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

புகார் அளிப்பதற்காக காவல்நிலையத்தின் அருகே நின்றுகொண்டிருந்த போது காவல்நிலையத்தில் உள்ளே இருந்து கதறல் சத்தம் கேட்டதாகவும் சாட்சியம்  அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையானது  7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo