ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது ஜப்பான்

by Admin / 08-03-2022 04:09:17pm
 ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது ஜப்பான்

உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்து ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது என ஜப்பான் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ரஷ்யா மீது ஜப்பான் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது இந்த நிலையில் தங்கள் நாட்டிலிருந்து  ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் இனிமேல் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

இதனிடையே ஆஸ்திரேலியாவிலும் ஆம்போல்  மற்றும் விவா எனர்ஜி ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்ய மறுத்துள்ளனர்

 

Tags :

Share via