பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள்-தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடிதம் .

by Admin / 30-12-2024 01:01:18pm
 பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள்-தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கைப்பட எழுதிய  கடிதம் .

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக ஞானசேகரன் கைது செய்யப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகள் போராட்டங்கள்நடத்தி வருகின்ற நிலையில்,

: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் வெளியாகி உள்ளது. அதில் அவர்,

அன்பு தங்கைகளே.! கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் ,என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் ,சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள் ,பாலியல் குற்றங்கள் என்று, பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொண்ணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது. நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்தது. அதற்காகவே கடிதம் எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும் எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவேன். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம். என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள்-தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கைப்பட எழுதிய  கடிதம் .
 

Tags :

Share via