குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள்

by Editor / 03-05-2021 03:21:08pm
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

  • தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை விட 137 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி.
  • மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி.
  • தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி.
  • மேட்டூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாளை விட 656 வாக்குகள் அதிகமாக பெற்று பாமக வேட்பாளர் சதாசிவம் வெற்றி.
  • காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி.
  • கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட 794 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் அசோக் குமார் வெற்றி.
  • விருதாச்சலம் தொகுதியில் பாமக வேட்பாளர் கார்த்திகேயனை விட 862 வாக்குக்கள் அதிகமாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி.
  • நெய்வேலி தொகுதியில் பாமக வேட்பாளர் ஜெகனை விட 977 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் சுபா ராஜேந்திரன் வெற்றி .
  • ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணியை விட 1091 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் தேவராஜி வெற்றி.
  • கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் குறிஞ்சிபிரபாகரனைவிட 1095 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் தாமோதரன் வெற்றி.
  • அந்தியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சண்முகவேலை விட 1275 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் வெற்றி.
  • திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்துவை விட 1382 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி.
  • தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை விட 1393 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி.
  • உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சோமசுந்திரத்தை விட 1622 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் சுந்தர் வெற்றி.
  • பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் வரதராஜனைவிட 1725 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி.
  • கோவை தெற்க்கு தொகுதியில் மநீம வேட்பாளர் கமல்ஹாசனை விட 1728 வக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி.
  • கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் காசிலிங்கத்தை விட 1945 வாக்குகள் அதிகமாக அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் வெற்றி.
  • திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் ஆறுமுகத்தை விட 1947 வாக்குகள் அதிகமாக பெற்று விசிக வேட்பாளர் பாலாஜி வெற்றி.
  • ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை விட 1952 வாக்குகள்அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் மதிவேந்தன் வெற்றி.
  • மயிலம் தொகுதியில் திமுக வேட்பாளர் மாசிலாமணியை விட 2230 வாக்குகள் அதிகமாக பெற்று பாமக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள்
 

Tags :

Share via