அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

by Staff / 30-06-2024 01:10:01pm
அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர், இச்சம்வம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புஷ்பநாதன் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனை அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via