ஆன்லைன் மூலம் ரூ. 50 லட்சம் மோசடி புகார். வாலிபர் கைது

by Staff / 18-09-2023 05:40:10pm
ஆன்லைன் மூலம் ரூ. 50 லட்சம் மோசடி புகார். வாலிபர் கைது

பூவன்கோடு பகுதி பூச்சாத்தான்விளை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். நான் ஒரு அறக்கட்டளையில் தலைவராக உள்ளேன். பள்ளியாடி நட்டாலம் பகுதியை சேர்ந்த ஒருவருர் டெல்லியை தலையிடமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் கிளையை தக்கலையில் நடத்தி வருவதாக கூறினார். அந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார்.இதை நம்பி நான் அந்த நிறுவனத்தில் 2 தவணைகளாக ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியது போல எந்த லாபமும் கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அதற்கு ரூ. 25 லட்சத்துக்கு 2 காசோலைகள் கொடுத்தார். அந்த காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி விட்டார்கள். எனவே என்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இன்று போலீசில் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via