சரஸ்வதி -ஆயுதபூஜை இன்று...
இன்று நவராத்திரியின் ஒன்பதாம் நாள் .சரஸ்வதி பூஜையாக வெகு விமர்சனையாக கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி மூன்று நாட்கள் அம்பிகை வழிபாடாகவும் முதன்மையாகவும் இரண்டாவது மூன்று நாள் துர்க்கை வழிபாடாகவும் அடுத்த மூன்று நாள் சரஸ்வதி பூஜையாகவும் கல்விக்குரிய- தொழிலுக்குரிய வளத்தை தரக்கூடிய நாள்களாக, இந்த கடைசி மூன்று தினங்கள் கொண்டாடப்படுகிறது. 9 நாட்களில் விரதம் இருக்காமலும் கொலு வைத்து பூஜையை செய்யாமல் இருப்பவர்களும் ஒன்பதாவது நாள் அல்லது பத்தாவது நாள் ,சரஸ்வதியை கோவில்களிலோ இல்லை வீட்டிலோ வைத்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களும் வீட்டை வந்தடைந்து நம்மை வளத்துடனும் நலத்தொடனும் வாழ வைப்பாள் அன்னை சரஸ்வதி தேவி. பிரம்மாவினுடைய துணைவியான சரஸ்வதி தேவி கல்வியையும் தொழிலையும் கொடுத்து நம்மை வளப்படுத்துபவள் . காயத்ரியாக- சாவித்திரியாக-சரஸ்வதியாக மூன்று வடிவங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய ஞானத்தை முழு முதல் கடவுளிடம் இருந்து பெற்று தரக்கூடியவளாக சரஸ்வதி திகழ்கிறாள். இந்த நல்ல நாளில், இந்த வழிபாட்டை மேற்கொள்ளுபவர்களுக்கு சரஸ்வதி அவர்களுடைய நாவிலே நல்வாக்காக நின்று வாழ்க்கையை வளப்படுத்துவாள் .படைப்பு கடவுளான பிரம்மாவின் அம்சங்களாக விளங்குபவள் சரஸ்வதி. அவள் கையில் வீணையை மட்டும் வைக்கவில்லை. ஜடா மகுடம் தன் தலையில் கூடியவள் அன்னை சரஸ்வதி. சரஸ்வதி ,அவளின் அன்னவாகனத்தில் பயணித்து வழிபட்டார் எல்லாம் வளத்தோடு வாழ செய்யும் ஞான வடிவான அன்னை சரஸ்வதி செல்வமும் கல்வியும் நம் இல்லத்தை நிறைக்க செய்பவள்...
அன்னை சரஸ்வதியை வழிபடக்கூடிய நல்ல காலம். காலை ஆறு முப்பதிலிருந்து ஏழு முப்பது வரையும் மாலையில் 4.45 லிருந்து 5. 45க்குள் அவளை வழிபடுட் பூஜைகள் செய்ய வேண்டும்..
Tags :