குண்டு வெடிப்பு எதிரொலி - திருச்சி ஜங்ஷனில் சோதனை

by Staff / 03-03-2024 02:24:49pm
குண்டு வெடிப்பு எதிரொலி - திருச்சி ஜங்ஷனில் சோதனை

பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு தமிழக காவல்துறை ஆணையிட்டுள்ளது. சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களையும் அவர்களின் நடமாட்டங்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரயில்களில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகள் முழுவதும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நிபுணர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

 

Tags :

Share via