வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி : இபிஎஸ்

by Staff / 01-12-2023 11:59:20am
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி : இபிஎஸ்

நடைபெறவுள்ள தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த 700பேர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய இபிஎஸ், "சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக எப்போதும் இருக்கும். வரும் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும்" என்று கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo