‘வருங்கால முதல்வரே’.. நயினார் போஸ்டரால் வெடித்த அடுத்த பஞ்சாயத்து

by Editor / 17-04-2025 02:52:44pm
‘வருங்கால முதல்வரே’.. நயினார் போஸ்டரால் வெடித்த அடுத்த பஞ்சாயத்து

திருநெல்வேலி: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’ என புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணி தற்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் கூட்டணி மட்டுமா அல்லது கூட்டணி ஆட்சியா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நயினார் நாகேந்திரன் புகைப்படத்தை பயன்படுத்தி, ‘வருங்கால முதல்வரே’ என குறிப்பிடப்பட்ட போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via