டிடிஎஃப் வாசன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Staff / 16-10-2023 05:36:06pm
டிடிஎஃப் வாசன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார். வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து விபத்தில் சிக்கி கைதான டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via