மாணவிகளிடம் ஆங்கிலத்தில் அமைச்சர் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்க திணறிய  மாணவிள் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

by Admin / 07-07-2026 12:55:42am
 மாணவிகளிடம் ஆங்கிலத்தில் அமைச்சர் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்க திணறிய  மாணவிள் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

விருதுநகர் சிவகாசி அருகே உள்ள திருத்தங்களில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்கதிணறிய  மாணவிகளை சுட்டிக்காட்டி அவர் பேசிய விதம் சர்ச்சையை உருவாக்கியது ..அரசு பள்ளியில் ஆங்கில புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் வீல்ஸ் அமைச்சர் ஒருவர் பிஞ்சு குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் உணர்ச்சியற்றது என்றும் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்தெந்த சூழ்நிலைகளில் கேமராக்களை தவிர்க்க வேண்டும் முதலில் வகுப்பு எடுக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதுதான் பொறுப்பில் உள்ளவர்களின் வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர்கள் தங்களின் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.ரீல்ஸ் மோகத்திற்கு பள்ளி சிறுவர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அமைச்சரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 மாணவிகளிடம் ஆங்கிலத்தில் அமைச்சர் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்க திணறிய  மாணவிள் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
 
Tags :

Share via

More stories

Logo