ஸ்ரீவைகுண்டம் சஎம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் 35 கோடியில் இருந்து 50 கோடி வரை தருவதாக பேரம்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் தன்னிடம் மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் 35 கோடியில் இருந்து 50 கோடி வரை தருவதாக பேரம் பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் 50 கோடி முதல் 100 கோடி வரை தருவதாக திமுக தரப்பைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் குதிரை பேரன் நடத்தியதாக ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியதோடு இந்த பேரத்திற்கு உடன்படவில்லை என்றால் கொலை செய்வதாக மிரட்டல் விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதற்கான ஆதாரங்கள் இடைத்தரகர்கள் பேசிய ஆடியோ உரையாடலையும் தன்னிடம் பேரரத்தில் ஈடுபட்ட முத்துராமன் என்பவரின் புகைப்படத்தையும் அவர் ஆதாரமாக வைத்துள்ளார். இந்தப் பேரரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை ஆய்வாளர் மகாதேவன் தலைமையிலான குழுவினர் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் நேரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது தன்னிடம் குதிரை பெரும் பேசப்பட்ட மொபைல் எண்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை உளவுத்துறை அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.
Tags :


















