திருச்செந்தூர் சுப்பிரமணியர் திருக்கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை கட்டண உயர்வு -பொது நல வழக்கு .
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்றும் நவகிரகங்களில் குருதலம்என்றும் அழைக்கப்படுகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணியர் திருக்கோவிலில் தரிசனம் மற்றும் பூஜை கட்டண உயர்வு. இந்து சமய அறநிலைத்துறை விதிகளின்படி கட்டணங்களை உயர்த்து முன் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் ஆனால் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் இணையதளங்களில் அல்லது நாளிதழ்களில் விளம்பரப்படுத்தாமல் பக்தர்களுக்கு விலை உயர்வு பற்றி அறிவிக்கப்படாமல் விலையை உயர்த்தியதன் காரணமாக ராம்குமார் என்கிற வழக்குரைஞர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பை இந்து சமய அறநிலைத்துறை இணையதளத்திலும் மாவட்ட இணையதளங்களிலும் விரிவாக வெளியிட வேண்டும் என்றும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் எளிதில் பெரிய தகவல் படி வைக்க வேண்டும் என்றும் ஜூலை 21 வரை கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கி உத்தரவு பெற்றுள்ளது.கோவில் நிர்வாகம் கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்திருந்தது
தங்கரத உலா: ₹2,500-லிருந்து ₹5,000 ஆக உயர்வு
.சண்முகார்ச்சனை: ₹5,000-லிருந்து ₹30,000 ஆக உயர்வு.
மூலவர் அபிஷேகம்: ₹1,500-லிருந்து ₹10,000 ஆக உயர்வு
.அபிஷேக தரிசனம்:சாதாரண நாட்கள் ₹500- விசேஷ நாட்கள்₹2,000 இருந்ததை ₹2,500 ஆக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது..
Tags :


















