கபிஸ்தலம் அருகே மண்ணியாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

by Staff / 27-09-2022 04:37:46pm
கபிஸ்தலம் அருகே மண்ணியாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே புத்தூர் கிராமத்தில் காவிரி ஆற்றில் இருந்து பிரியும் மண்ணியாற்றில்  மணல் போக்கி வாய்க்காலில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முகம் மற்றும் தலையில் காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாக கோவிந்தநாட்டுசேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

கோவிந்தநாட்டு சேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் இது குறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.   கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஏன் முகத்தில் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

Tags :

Share via