நாங்குநேரி பள்ளி மாணவர் மீது சாதிய ரீதியிலான நடத்தப்பட்ட தாக்குதல் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர் மீது சாதிய ரீதியிலான நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், மாணவ சமுதாயத்தினரிடையே ஜாதிய சிந்தனையைத் தூண்டி, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுகவினருக்கும், தூண்டிவிடும் சமூகவிரோதிகளுக்கும் கடும் கண்டனம். நாங்குநேரியில் நடந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
Tags :