சென்னை பல்கலைக்கு கருணாநிதி பெயர்-, ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்கோரிக்கை

by Editor / 22-06-2021 08:55:28am
சென்னை பல்கலைக்கு கருணாநிதி பெயர்-, ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்கோரிக்கை

சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்ட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழினம், தமிழகத்திற்கு செய்த தொண்டினை போற்றும் வகையில் பன்முகத் தலைவர் கருணாநிதி பெயரில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயரின் ஆட்சியின் போது அதாவது கடந்த 1857ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைக்கழகத்தில் தான் நோபல் பரிசு பெற்ற சர் சிவி இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர் ஆகியோர்கள் படித்தார்கள் என்பதும் அதுமட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும் இந்த பல்கலையில் தான் படித்தார் என்பதும் அதேபோல் கணித மேதை ராமானுஜன் படித்த பல்கலைக்கழகம் என்ற பெருமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via