தனுஷின் "குபேரா" படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

நடிகர் தனுஷின் "குபேரா" படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 51-வது திரைப்படமான "குபேரா" படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :