பால்கனி இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம்

by Editor / 09-06-2025 04:43:52pm
 பால்கனி இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம்

சென்னை: மாதவரம் மூலக்கடை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜிக்கா. இவருக்கு சொந்தமான வீட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (ஜூன் 8) இரவு தொழிலாளர்கள் பால்கனி கைப்பிடி சுவரில் சாய்ந்தப்பபடி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கைப்பிடி சுவர் சரிந்து விழுந்ததில், கட்டிட இடிபாடுகளுடன் சேர்ந்து தொழிலாளர்களும் விழுந்து சிக்கியுள்ளனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 4 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories