சென்னையில் மின்சார பைக்குகள் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ

by Editor / 28-06-2022 11:12:24am
சென்னையில் மின்சார பைக்குகள்  ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ

பெங்களூரிலிருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை  ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.சென்னை அமைந்தகரை ஸ்கைவாக்  எதிரே வந்த போது லாரியின் முன் புறத்தில் இருந்து திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்த நிலையில் வாகனத்தில் பின் பகுதியில் தீ பரவாது வதற்குள் கட்டுப்படுத்தியதால் லாரியில் இருந்த 18 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo