நாங்குநேரி சம்பவம் - நேரில் நலம் விசாரித்த அமைச்சர்

by Staff / 12-08-2023 02:15:16pm
நாங்குநேரி சம்பவம் - நேரில் நலம் விசாரித்த அமைச்சர்

நாங்குநேரியில் ஜாதிய ரீதியான மோதலில் தாக்குதல் நடத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரியை சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ''முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாணவனை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். மாணவனின் தாயாரிடம் முதல்வர் தொலைபேசி வாயிலாக பேசி, அவர்களுடைய படிப்பு தடை படாமல் இருக்க, அரசு எப்போதும் உடன் இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via