போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம்

by Editor / 13-09-2022 10:26:34am
போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம்

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் , தற்போது 3வது முறையாக இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணியின்  இல்லம் முன்பாக குவியும் அதிமுக தொண்டர்களை காவல்துறை தடுப்பதால் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம்.

 

Tags :

Share via

More stories