சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்கைது

by Staff / 26-11-2022 02:33:13pm
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த சிறுமிக்கு சத்தியமங்கலம் அடுத்த தொண்டம் பாளையத்தைச் சேர்ந்த பாரதி (23) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். பாரதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அந்த சிறுமி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சிறுமி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.  அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பாரதியும் சிறுமியும் தொண்டம் பாளையத்தில் உள்ள பாரதி தாத்தா வீட்டில் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் பாரதியின் தாத்தா வீட்டிற்கு சென்று சிறுமியையும், பாரதியையும் மீட்டனர். போலீசார் விசாரணையில் சம்பவத்தன்று சிறுமியிடம் பாரதி ஆசைவார்த்தை கூறி அவரை வெளியே அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாரதி சிறுமி கழுத்தில்  தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. பாரதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில்  தெரிய வந்தது. இதனை அடுத்து சத்தியமங்கலம் போலீசார் பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories