இன்றுடன் அமலாக்கத்துறை காவல் முடிவடைகிறது
செந்தில் பாலாஜியை 7ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் இன்றுடன் முடிவதால், செந்தில் பாலாஜியை இன்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். ஆனால், எதிர்பார்த்த கேள்விகளுக்கு அவரிடம் பதில்கள் வரவில்லை என்றால், அவருடைய காவலை நீட்டிக்க அமலாக்கத்துறை முறையிடவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags :