பாதியில் நின்ற படத்தை முழுமையாக்க கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது.

by Editor / 16-07-2022 11:07:32am
பாதியில் நின்ற படத்தை முழுமையாக்க கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது.

சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே உள்ள ஜவுளி கடையில் ரூ 5 லட்சம் மற்றொரு கடையில் ரூ.1.5 லட்சம் என அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆட்டோவில் வந்து இறங்கி மர்ம நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து சென்றது பதிவாகியுள்ளது. அந்த நபர் குறித்து விசாரித்ததில், திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி வந்த ஆனந்த் என்றும் இவர் பெங்களூரு பகுதியை  சேர்ந்தவர் என்பதும் இவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்திடமிருந்து 3 செல்போன்கள், 4 லட்சம் ரொக்கபணம் , கார், திருட்டு தொழிலுக்குத் தேவையான இரும்பு உபகரணங்கள், முகமூடி, கையுறை, தொப்பி ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர். ஆனந்த் மீது கர்நாடகாவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வழக்குள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் தானே தயாரித்த ஒரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொருளாதார பிரச்சனையால் அந்த படம் பாதியில் நின்றுள்ளது. இதனால் இந்த படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகபோலீசாரிடம்  ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Tags : The person who was involved in the robbery to complete the half-finished film was arrested.

Share via