தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம். 

by Admin / 12-01-2024 07:08:19pm
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர்கள் மணிமொழி நங்கை, செந்தில்குமரன், லினாளோ பிரின்ஸ் சாம், ஆகியோர் தலைமை வகித்தனர். செல்வராஜ், ராமமூர்த்தி, சுரேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கருப்பசாமி தொடக்க உரை நிகழ்த்தினார். ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி செல்வராஜ், ராமமூர்த்தி, ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிறைவாக சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தும் அரசானையை உடனடியாக ரத்து செய்யக் கோரியும். கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி பள்ளிக் கல்வி துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர், ஆகியோர் டிட்டோஜாக் உயர் மட்ட குழுவில் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்கான ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றிக்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம். 
 

Tags :

Share via