வரலாற்றில் இன்று 08/03/2022-செவ்வாய்

by Editor / 08-03-2022 01:34:32pm
வரலாற்றில் இன்று 08/03/2022-செவ்வாய்

1010 : பாரசீகப் புலவர் ஃபெர்டோவ்ஸி ஈரானின் தேசிய இதிகாசமான ஷாஃனாமே எழுதி முடித்தார்.

1618 : கிரக இயக்கத்தின் மூன்றாவது விதியை ஜோகன்னஸ் கெப்ளர் கண்டுபிடித்தார்.

1702 : இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய ராஜ்ஜியங்களின் அரசியாக அன்னே முடிசூடினார்.

1736 : நாதிர்ஷா ஈரானின் மன்னராக முடிசூடினார்.

1748 : ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன் ஜான்சீன் என்பவர் 
ஸ்டீல் பேனாக்களை முதன்முதல் அறிமுகப்படுத்தினார்.

1782 : அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய இந்தியப் பழங்குடிகளை பென்சில்வேனியாவின் துணை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். 
கொல்லப்பட்டவர்களில் 68 பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

1817 : நியூயார்க் பங்குச்சந்தை நிறுவப்பட்டது.

1844 : முதலாம் ஆஸ்கார் ஸ்வீடன்-நார்வே மன்னராக முடிசூடினார்.

1910 : பிரான்ஸைச் சேர்ந்த ரேமன்டே டி லாரோச் விமானிக்கான உரிமம் பெற்ற உலகின் முதல் பெண் விமானி ஆனார்.

1911 : சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1921 : ஸ்பெயின் பிரதமர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

1924 : அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.

1933 : உலகின் முதல் தனியார் துப்பறியும் நிறுவனம் 
பாரிஸில் ஆரம்பமானது.

1942 : இரண்டாம் உலகப் போர் :- ஜாவாவில் ஜப்பான் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தன.

இரண்டாம் உலகப் போர் :- பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் பிரிட்டனிடம் இருந்து கைப்பற்றியது.

1947 : பிப்ரவரி 26 எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து சீனக் குடியரசின் 13 ஆயிரம் ராணுவத்தினர் நடத்தியத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1950 : சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக அறிவித்தது.

1957 : சூயஸ் நெருக்கடிக்குப் பிறகு எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.

1963 : சிரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.

1965 : வியட்நாம் போர் :- 3,500 அமெரிக்கப் படையினர் தென் வியட்நாமில் தரை இறங்கினர்.

1977 : காங்கோ ஜனாதிபதி மெரியன் நைகோபி படுகொலை செய்யப்பட்டார்.

1979 : பிலிப்ஸ் நிறுவனம் காம்பெக்ட் டிஸ்க்கை முதன் முறையாக அறிமுகம் செய்தது.

1982 : ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ராணுவம் நச்சுப் புகை மூலம் 3,000 பேர்களைக் கொன்றது.

1985 : லெபனான், பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்ட வாகன குண்டு தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர்.
175 பேர் காயமடைந்தனர்.

1996 : மும்பையில் பெரிய கட்டிடம் ஒன்றின் அடித்தளத்தில் தூண்கள் பழுது பார்க்கும் போது ஏற்பட்ட அதிர்வினால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2014 : கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயமாக மறைந்தது.

 

Tags :

Share via