நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம் 

by Editor / 17-06-2021 04:45:32pm
 நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம் 



நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக நாளை அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படம், 'அண்ணாத்த'. சிவா இயக்கும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இதில் ரஜினி தொடர்பான காட்சிகள் முழுவதும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. டப்பிங் பணிகளையும் ரஜினி விரைவில் முடித்துவிடுவார் என்றும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்தியாவில் இருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளதால், தனி விமானம் மூலம் நாளை மறுநாள் அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினியுடன் அவர் குடும்பத்தினரும் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories