தமிழகத்தில் ஆட்சியை  பிடிப்பது யார்? கருத்துக்கணிப்பு முழு விவரம் 

by Editor / 29-04-2021 09:10:11pm
தமிழகத்தில் ஆட்சியை  பிடிப்பது யார்? கருத்துக்கணிப்பு முழு விவரம் 

 

தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரியவந்துள்ளது.அதன் விவரம்:தமிழகம்: மொத்த தொகுதிகள் 234 ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்பு அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என ரிபப்ளிக் டி.வி. சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ளது.பி- மார்க் கருத்து கணிப்பு அ.தி.மு.க., கூட்டணி 58 முதல் 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும், மற்றவை 12 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என பி-மார்க் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.டுடேய்ஸ் சாணக்கியா:அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-182 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என டுடேய்ஸ் சாணக்கியா கணித்துள்ளது.இந்தியா அஹெட் கருத்து கணிப்பு தி.மு.க., கூட்டணி 165 முதல் 190 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 40 முதல் 65 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் என இந்தியா அஹெ ட் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.சி ஓட்டர்ஸ் தி.மு.க, கூட்டணி 160 முதல் 172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 முதல் 70 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் 'சி' ஓட்டர்ஸ் கணித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo